கருச்சிதைவு சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் பற்றிய அறிக்கை - இலங்கை பாதுகாப்பான கருச்சிதைவு கூட்டணி (Sri Lanka Safe Abortion Coalition), மார்ச் 2025
குறிப்பிட்ட சூழ்நிலைகளில் கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்கும் சட்ட கட்டமைப்பு வரைவு செய்யப்படுவதை இலங்கை பாதுகாப்பான கருச்சிதைவு கூட்டணி (SLSAC) வரவேற்கிறது. சாத்தியமற்ற கருவில் குறைபாடுகள் உள்ள கர்ப்பங்களை கலைக்க பெண்களுக்கு அனுமதி அளிப்பதில் முன்மொழியப்பட்ட சட்ட கட்டமைப்பு தற்போது வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். 1883 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட உலகின் மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட கருச்சிதைவு சட்டங்களில் ஒன்றைக் கொண்ட நாட்டில், பெண்களின் உடல் சுயாட்சி மற்றும் சமத்துவம், கண்ணியம் மற்றும் தேர்வுக்கான அவர்களின் உரிமையை அங்கீகரிக்க இது ஒரு வாய்ப்பாகும்.
இலங்கையின் கடுமையான கருச்சிதைவு சட்டத்தை சீர்திருத்த பல தசாப்தங்களாக மீண்டும் மீண்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன - மிக சமீபத்தில் 2022, 2017 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில், எனினும் இவை சாத்தியமான விளைவுகளை கொண்டுவரவில்லை. இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி, இலங்கை குழந்தை மருத்துவர்கள் கல்லூரி மற்றும் இலங்கை மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ வல்லுநர்கள் கல்லூரி இந்த சட்ட கட்டமைப்பை முன்வைத்து, பாதுகாப்பான கருச்சிதைவு தொடர்பான பிரச்சனைகளை (வரையறுக்கப்பட்ட சூழல்களுக்கு மட்டுமானாலும்) மீண்டும் ஒருமுறை முன்னிலைப்படுத்தியதை நாங்கள் வரவேற்கிறோம். பெண்களின் இனப்பெருக்க சுய அதிகாரத்தை அங்கீகரிப்பதில் கருச்சிதைவை முழுமையாக குற்றமற்றதாக்குவதற்கும் சட்டப்பூர்வமாக்குவதற்கும் எங்கள் வாதத்தை தொடரும்போது, முன்மொழியப்பட்ட முன்மொழிவை நாங்கள் ஆதரிக்கிறோம்.
புதிய அரசாங்கத்தின் கீழ் இந்த சீர்திருத்தங்கள் வெற்றிகரமாக அமையும் என நாம் நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஆகஸ்ட் 2024 இன் தேசிய மக்கள் சக்தி (NPP) தேர்தல் அறிக்கையான "வளமான தேசம், அழகான வாழ்க்கை"யில் அரசு தனது உறுதிப்பாட்டை பின்வருமாறு உறுதி செய்துள்ளது என்பதை நாங்கள் குறிப்பாகக் கவனிக்கிறோம்: கர்ப்பத்தின் பாதுகாப்பான கலைப்பை உறுதி செய்வதற்கான சட்ட ஆணையத்தின் 2012 பரிந்துரைகளை செயல்படுத்துதல் (பக்கம் 44). 2012 பரிந்துரைகள் இரண்டு குறிப்பிட்ட காரணங்களுக்காக கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்குமாறு கோருகின்றன: பாலியல் வன்புணர்வின் போது, மற்றும் கடுமையான கரு குறைபாடு காணப்படும் சந்தர்ப்பங்களில். இருப்பினும், இந்த பரிந்துரைகள் போதுமானதல்ல, ஏனெனில் இலங்கையில் கருச்சிதைவு கோரும் பெரும்பாலான பெண்கள் இந்த வரையறைகளுக்கு உட்படாத காரணங்களுக்காக அதை கோருகின்றனர். மற்ற காரணங்களுக்காக தங்கள் கர்ப்பத்தை கலைக்க விரும்பும் பெண்களுக்கு இந்த முன்மொழிவுகள் பாதுகாப்பான மற்றும் கண்ணியமான தெரிவுகளை வழங்கவில்லை.
இந்த சீர்திருத்த செயல்பாட்டில் பெண்கள் உரிமை குழுக்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் ஆலோசனை இல்லாதது குறித்து நாங்கள் குறிப்பாக கவலையடைகிறோம். மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வமான கருச்சிதைவுக்கான பெண்களின் உரிமைக்காக குரலெழுப்பும் சிவில் சமூக பிரதிநிதிகளாக, இந்த செயற்ப்பாட்டில் உள்ள இப்பெரும் குறை எமக்கு ஏமாற்றமளித்துள்ளது. தற்போதைய சீர்திருத்த உரையாடலின் ஒரு பகுதியாக மகளிர் விவகார அமைச்சகம் இல்லை என்பதையும் நாங்கள் கவலையுடன் கவனிக்கிறோம். இவ்வாறான நடைமுறைகள் யாரை பாதிக்கிறதோ, யாரின் சம்மதம் இதற்க்கு தேவைப்படுகிறதோ, அந்த நபர்களை கருச்சிதைவு செய்வதற்கான முடிவில் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதையும், இந்த செயல்பாட்டில் முதன்மை தீர்மானம் எடுப்பவர்களாக அவர்கள் இருக்க வேண்டும் என்பதையும் நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஒரு பெண்ணின் உடல் பற்றி தீர்மானிக்கும் உரிமை இந்த உரையாடலின் மையமாகும்.
கருச்சிதைவை குற்றமற்றதாக்குவதற்கான பிரச்சாரம் என்பது ஒரு தார்மீக நிலைப்பாடு அல்ல, அல்லது இது வெறுமனே ஒரு மருத்துவ முடிவு அல்ல - இது பெண்களின் முடிவெடுக்கும் அதிகாரத்தை மையமாகக் கொண்ட ஒரு நிலைப்பாடு மற்றும் காலாவதியான, காலனித்துவ சட்டத்தை சீர்திருத்த வேண்டிய அவசியத்தையும் இது காண்பிக்கின்றது, இதனால் பெண்களின் உரிமைகள் மற்றும் சுய அதிகாரம் முழுமையாக உத்தரவாதம் அளிக்கப்படும். கொள்கை முடிவுக்கு முக்கியமான தரவுகளை ஆய்வு செய்வதற்கும், புரிந்துகொள்வதற்கும், பராமரிப்பதற்கும் அரசு இதுவரை தவறிவிட்டது.
பெண்கள் உரிமை ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளின் கூட்டணியாக:
பெண்கள் சட்டத்தில் திருத்தங்கள் குறித்த அனைத்து விவாதங்களிலும் இது பெண்களை பாதிக்கும் சட்டம் என்பதை அங்கீகரித்து, பெண்கள் பிரதிநிதிகள், பெண்கள் உரிமை அமைப்புகள் மற்றும் பாதுகாப்பான கருச்சிதைவுக்காக செயற்படும் சமூக ஆர்வலர்களை உள்ளடக்குமாறு அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்.
அனைத்து பெண்களின் உரிமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கவும், நிறைவேற்றவும் அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம், உடல், உடல் நலம் மற்றும் நல்வாழ்வு குறித்து தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கும் உரிமையையும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் கருச்சிதைவை சட்டப்பூர்வமாக்குவதற்கும் குற்றமற்றதாக்குவதற்கும், இடைக்காலத்தில், நீதித்துறை அங்கீகார தேவைகள், கட்டுப்படுத்தும் காலக்கெடு மற்றும் குறிப்பாக பாலியல் வன்புணர்வின் போது, சிறுமிகள் இலவச, சட்ட மற்றும் பாதுகாப்பான கருச்சிதைவை அணுகுவதற்கான பிற தடைகளை நீக்க வேண்டும் என்றும் பெண்கள் மீதான அனைத்து பாகுபாடுகளை நீக்குவதற்கான சர்வதேச மாநாட்டின் (CEDAW) கீழ் இலங்கைக்கு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அதன் கடமைகளுக்கு அரசின் கவனத்தை ஈர்க்கிறோம்.
CCPSL, SLCP மற்றும் SLCOG முன்மொழியப்பட்ட திருத்தங்களுடன் முன்னேறவும், எவ்வித வரையறைகளும் இன்றி கருச்சிதைவை குற்றமற்றதாக்க பொது சுகாதார அதிகாரிகள், பெண்கள் உரிமை சமூக ஆர்வலர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் உளவியல் ஆதரவு நிபுணர்களுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றவும், பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் சட்டபூர்வமான கருச்சிதைவு சேவைகளை அணுகும் உரிமை வழங்கவும் அரசை நாங்கள் கடுமையாக வலியுறுத்துகிறோம்.